சிங்கப்பூரில் ரயில் பசுமைப் பாதை மீண்டும் திறப்பு..!

(Photos: @yvonne1609 and @bachibachid41 on Instagram)

சிங்கப்பூரில், நான்கு கிலோ­மீட்­டர் தொலைவு கொண்ட ஹில்வியூ மற்றும் புக்­கிட் தீமா இடையிலான ரயில் பசு­மைப் பாதை புதிய சிறப்புகளுடன் மீண்­டும் திறக்கப்பட்டுள்ளது.

2017 ஆண்டு தொடங்கப்பட்ட மத்­திய பசு­மைப் பாதை என்று அழைக்கப்படும் இந்த பசுமைப் பாதையானது புதிப்பிப்பதற்க்காக கடந்த 2019 ஆண்டு மூடப்பட்டது.

சிங்கப்பூருக்குள் S$800,000க்கும் அதிகமான பணத்துடன் வந்த பயணிக்கு அபராதம்!

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை இணைக்கும் முந்தைய ரயில் பாதையானது கடந்த 2011 ஆண்டு பயன்பாட்டை நிறுத்திய பிறகு இது பசுமைப் பாதையாக மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பசுமைப் பாதையில் சிறப்பம்சங்களாக ரயில் மரபுரிமை அம்சங்கள் காக்கப்பட்டுள்ளதாகவும், இதை பயன்படுத்தி வரும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் வசதிற்கேற்ப அதிகமான நுழைவாயில்களும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், பாதை முழுவதும் பசுமை அம்சங்கள் மேம்படுத்தப்பட்டதாகவும், பழமைவாய்ந்த செடிகள் நாட்டப்பட்டதாகவும் மற்றும் அங்குள்ள விலங்குகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்க அதிக வெளிச்­சம் இல்­லாத விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இயற்க்கை மற்றும் பொழுதுபோக்குக்கு இடத்தை ஒதுக்குவதின்றி அங்கிருக்கும் வரலாற்று உட்கட்டமைப்புகள் பாதுகாக்கப்பட்டதாக திரு லீ கூறியுள்ளார்.

புதிய சுரங்க நடைபாதைகள் பாதசாரிகள் நடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்றும், இது சுமார் 3.6 மீட்டர் குறுக்களவு கொண்டது என்றும், நகர மறு­சீ­ர­மைப்பு மற்றும் தேசிய பூங்­காக் கழ­க­மும் தெரிவித்துள்ளது.

இந்த முழு பாதையானது சுமார் 24 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது என்றும், இதன் இயற்கை, மர­பு­டைமை, மேம்­பாடு ஆகிய அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

வேலையிட விபத்துகளில் இருந்து ஊழியர்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்!