பயங்கரவாத மிரட்டல் அதிகம்… அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்

உலகளவில் கோவிட்-19 க்குப் பிறகு சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்குவதன் மூலம் பயங்கரவாத இயக்கம் மற்றும் செயல்பாடுகள் அதிகரிக்க கூடும் என்று கவலைக்கொள்வதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ISD) தெரிவித்துள்ளது.

பயங்கரவாத சித்தாந்தத்திற்கு தானாக கவரப்படும் தனிநபர்களிடமிருந்தே பயங்கரவாத அச்சுறுத்தல்களை சிங்கப்பூர் எதிர்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்தில் பிறப்புறுப்பை காட்டிய ஆடவர் – பல முறை அவ்வாறு செய்ததாக புகார்

சிங்கப்பூர் மீதான உடனடி பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தற்போது குறிப்பிட்ட புலனாய்வு எதுவும் இல்லை என்று ISD தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 33 சிங்கப்பூரர்கள் மற்றும் 12 வெளிநாட்டவர்கள் அடங்கிய 45 நபர்கள் உள்நாட்டுப் பாதுகாப்பின் கீழ் தடுப்பு உத்தரவு அல்லது கட்டுப்பாடு உத்தரவின்கீழ் வைக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த குற்றங்களுக்காக 13 நபர்களில் மூன்று சிங்கப்பூரர்கள் மற்றும் 10 வெளிநாட்டவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இன்னும் இதோபோன்ற அசச்சுறத்தல்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (ISD) கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

26 வயது ஆடவர் ரத்த வெள்ளத்தில் சாலையில் சடலம், கொலையா தற்கொலையா- காவலர்கள் விசாரணை !