ஸ்ரீ மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழாவில் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்!

Sri Mariyamman temple Firewalking Ceremony

 

ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் தீமிதித் திருவிழா, இவ்வாண்டு வரும் நவம்பர் 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூரின் செளத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன், தீமிதித் திருவிழா அன்று பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

சாங்கி விமான நிலையம் அருகே விபத்து: டாக்ஸி மோதி சுக்குநூறாய் போன பைக் (வீடியோ)

அதன்படி, நவம்பர் 5- ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று பூக்குழியை கடக்கும் ஆண் பக்தர்கள் அனுமதி வளையல் (ரிஸ்பேண்ட்), ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை கங்கணத்தை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அனுமதி வளையல் (ரிஸ்பேண்ட்) மற்றும் கங்கணத்தை பக்தர்கள் பெற்றுக் கொள்ள முடியாது. 16 வயதுக்கும் கீழ்பட்டவர்களும், பெண் பக்தர்களும் பூக்குழியை கடந்து வருவதற்கு அனுமதி கிடையாது.

16 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட பக்தர்கள் பூக்குழியைக் கடப்பதாக இருந்தால் அக்டோபர் 14- ஆம் தேதி முதல் அக்டோபர் 29- ஆம் தேதி வரை, இரவு 07.00 மணி முதல் இரவு 09.00 மணியிலான நேரத்தில் தங்களது பெற்றோர் அல்லது காப்பாளருடன் (கார்டியன்) ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு வந்து, விவரங்களை உறுதி செய்துக் கொண்டு திருவிழாவுக்கு பதிவு செய்துக் கொள்ளலாம்.

பணிப்பெண்ணை தீர்த்துக்கட்டி சொந்த நாட்டுக்கு தப்பி ஓட்டம்.. வெளிநாட்டு ஊழியரை தேடிவரும் இன்டர்போல்

பூக்குழியைக் கடக்கும் பக்தர்கள் பூ மாலை அல்லது பூஜை பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. பெண் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பூக்குழியை வலம் வருவதற்கு அனுமதிக்கப்படுவர்.

வரும் நவம்பர் 5- ஆம் தேதி மற்றும் நவம்பர் 6- ஆம் தேதி பூக்குழியைச் சுற்றிவரும் பெண் பக்தர்கள் தங்களது அனுமதி வளையல் (ரிஸ்பேண்ட்), கங்கணத்தை ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் கல்யாண மண்டபத்தின் முதல் மாடியில் நவம்பர் 5- ஆம் தேதி இரவு 11.00 மணி முதல் நவம்பர் 6- ஆம் தேதி அதிகாலை 01.00 மட்டுமே மட்டுமே பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.