சிங்கப்பூரில் மூன்று இந்தியர்களுக்கு சிறை தண்டனை

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

தொழில்நுட்பம் தொடர்பான மோசடிகளில் ஈடுபட்டு வந்த நாடுகடந்த பண மோசடி குழுவில் இணைந்ததற்காக, சிங்கப்பூருக்குப் படிப்பதற்காக வந்த மூன்று இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை, நந்தி நிலாத்ரி (24) என்ற ஆடவர், பணம் செலுத்தும் சேவைகள் சட்டத்தின்கீழ் மூன்று குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்றத்தை இயங்காமல் தடுத்தது தொடர்பாக ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்கு நற்செய்தி: “திருப்பதி – சிங்கப்பூர்” இடையே இனி பறக்கலாம்!

இந்நிலையில், அவருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. நிலாத்ரி இந்த மோசடி தொடர்பில் S$30,500 வரை பணத்தை கையாண்டதாக கூறப்பட்டுள்ளது.

அதே போல, S$118,000க்கும் அதிகமான பணத்தைக் கையாண்ட மற்றொரு நபரான ஆகாஷ் தீப் சிங் (23) மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பபட்டுள்ளது என்றும் அது செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்றாவது குற்றவாளி, கிரி டெப்ஜித் (24) இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, ஏழு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் S$61,000க்கும் அதிகமான பணத்தொகையை பெற்றுள்ளார்.

கிரியும் நந்தியும் கடந்த 2019இல் படிப்பதற்காக சிங்கப்பூர் வந்துள்ளனர், அதற்கு அடுத்த ஆண்டு ஆகாஷ் வந்தார். ஆனால், நீதிமன்ற ஆவணங்களில் அவர்கள் படிக்கும் கல்லூரிகளின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தொழில்நுட்ப ஆதரவு மோசடிகளை செய்யும் நாடுகடந்த குழு மூலம் வரும் வருமானத்தைத் தக்கவைத்துக்கொள்வது தொடர்பான குற்றச்சாட்டுகளை அந்த குழு எதிர்கொண்டுள்ளதாக சிங்கப்பூர் போலீஸ் கூறியுள்ளது.

OCBC வங்கியில் 5 ஆண்டுகளில் சேமித்த S$120,000 பணத்தை வெறும் 30 நிமிடங்களில் இழந்த சோகம் – தொடர்ந்து எச்சரிக்கும் வங்கி