மதுபோதையில் இருந்த ஆடவர் மீது செருப்பு, துடைப்பங்களை வீசி, கழிவுகளை ஊற்றிய இளையர்கள் குழு – யார் அந்த ஆடவர்?

Throwing slippers and pouring water
PHOTO: Instagram/Sgfollowsall

மதுபோதையில் இருந்த ஆடவர் ஒருவரை இளையர்கள் குழு ஒன்று துன்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

அந்த இளையர்களால் எடுக்கப்பட்டது போல தோன்றும் மூன்று காணொளிகள் Sgfollowsall இல் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 10) பதிவேற்றப்பட்டன.

கட்டுமான தளத்தில் அதிக இரைச்சல்.. மெத்தையை வைத்து ஜன்னலை மூடும் குடியிருப்பாளர்களின் நிலை

அந்த காணொளியில், சுயநினைவின்றி மயக்க நிலையில் இருக்கும் ஆடவர் மீது அவர்கள் பல்வேறு பொருட்களை வீசு எறிவதை காண முடிந்தது.

இந்த சம்பவம் எப்போது, ​​எங்கு நடந்தது என தெளிவாக தெரியவில்லை. எதிலும் குறிப்பிடப்படவும் இல்லை.

தரையில் அமர்ந்திருந்த அடர் நீல நிற சட்டை அணிந்த அந்த ஆடவர் மீது இளையர்கள் செருப்புகளை வீசுவதை முதல் காணொளியில் காணமுடிந்தது.

மற்றொரு காணொளியில், துடைப்பங்கள், காய்ந்த செடிகள் மற்றும் கூம்புகளையும் அவர்கள் வீசி எறிகின்றனர்.

அதோடு விடாமல் வாளியில் இருக்கும் அழுக்குத் தண்ணீரை எடுத்து ஆடவர் மீது கொட்டுகின்றனர்.

மதுபோதையில் இருந்ததாக நம்பப்படும் அந்த ஆடவர், இளையர்களின் அந்த மோசமான செயல்களுக்கு எதிர்வினையாற்றவில்லை.

அந்த மூன்று காணொளிகளும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

“இதை அவர்கள் வேடிக்கையாகக் பார்க்கிறார்களா?” என்று ஒருவரும், “அவர்களுக்கு எதிராக போலீஸ் புகார் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று பல நெட்டிசன்களும் கருத்து தெரிவித்தனர்.

அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை விளக்கி இளையர்களில் ஒருவர் என கருதப்படும் நபர் அந்த காணொளியில் கருத்து தெரிவித்தார்.

ஆடவர் அவர்களின் பொருட்களையும், உணவையும் எட்டி உதைத்ததாகவும், எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை என்றும் இளைஞர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் இன பாகுப்பாடு பார்ப்பவர்கள் இல்லை” என்று அவர் கூறினார். இதிலிருந்து ஒருவேளை ஆடவர் வெளிநாட்டவராக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது.

“நாங்கள் அனைவரும் நல்லவர்கள்” என்றும் அவர் தன்னை கூறிக்கொண்டார்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட அந்த ஆடவர் யார் என எந்த விவரங்களும் தெளிவாக தெரியவில்லை.

இரு வெளிநாட்டவர்களுக்கு அறையை வாடகைக்கு விட்ட நபருக்கும் சிறை.. அதிக காலம் தங்கிய இருவருக்கும் சிறை