‘எக்கச்சக்க’ லைக்குகளைக் குவித்த பெண் காவல் அதிகாரி! – சிங்கப்பூர் ரசிகர்களிடையே வைரலான வீடியோ!

pc - mothership police officer tiktok likes pretty
சிங்கப்பூர் காவல்படையைச் சேர்ந்த பெண் காவல் அதிகாரி TikTok-இல் பதிவிட்ட வீடியோவைக் கண்ட சிங்கப்பூரர்கள் ரசிகர்களாக மாறினர்.பெடோக் பிரிவின் அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் (ERT) குழுத் தலைவரான ப்ரிஸ்கில்லா, காவல் சீருடையில் சிங்கப்பூர் போலீஸ் படையின் (SPF) அதிகாரப்பூர்வ TikTok கணக்கில் பதிவிட்ட வீடியோவிற்கு 40,000 லைக்குகள் கிடைத்துள்ளன.
அந்த வீடியோவில் குண்டு துளைக்காத உடுப்பு, சப்மஷைன் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவை அடங்கிய பருமனான ஆயுதப் பெட்டியை ப்ரிசில்லா ஏந்திச் சென்றார்.அப்போது கேமராமேன் “பாரமா?” என்று கேட்டார்.
“இல்லை,” என்று கூலாகக் கூறிய அவள் “இது மட்டும்… 17 கிலோ.” எடை என்றும் ரோந்துக்கு செல்வதாகவும் அறிவித்தார்.பிரிசில்லாவின் புதிய ரசிகர்களுக்கு, வரும் வாரங்களில் இன்னும் சில அதிகாரிகளை வீடியோவில் காண முடியும்.”
காவல்துறையில் மற்ற பிரிவுகளைச் சேர்ந்த பல அதிகாரிகளைப் பற்றி அறிந்துகொள்ள (SPF) அதிகாரப்பூர்வ பக்கத்தை பின்தொடரவும்” என்று அவள் கூறினாள்.மேலும்,”எங்களைப் போன்ற காவல் அதிகாரிகள் சாலையில் இருக்கும்போது பார்த்தால்’ஹாய்’ சொல்லுங்கள்.” என்றும் கூறினார்.