தலையில் பிளாஸ்டிக் பை அணிந்து காபி கடைக்குள் திருட்டு – CCTV காட்சிகளை வைத்து தூக்கிய போலீஸ்

Shin Min Daily News

இரவு நேரத்தில் தலையில் பிளாஸ்டிக் பை அணிந்த ஆடவர் ஒருவர் காபி கடைக்குள் நுழைந்து திருடியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் S$700 க்கும் அதிகமான பணப் பதிவேடுகள் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை கொள்ளையடித்த அந்த நபர் அதே நாளில் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூருக்குள் இரு மலைப்பாம்புகளை கடத்திய ஓட்டுனருக்கு S$5,000 அபராதம்

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (மே 28) நள்ளிரவு 2 மணியளவில் பூன் தியோங் சாலையில் உள்ள ஒரு காபி கடையில் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

CCTV காட்சிகளில், அந்த சந்தேக நபர் கத்தரிக்கோலால் மின்னணு பணப் பதிவேட்டில் இணைக்கப்பட்ட வயர்களை வெட்டுவதைக் காண முடிந்ததாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் ஐந்து பணப்பெட்டிகளுடன் அவர் காபி கடையை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைக்காரர், வழக்கமாக இரவு 11 மணிக்கு கடையை மூடிவிட்டு பணத்தின் பெரும்பகுதியைத் திரும்பக் கொண்டு செல்வார் என்றும், பணப் பதிவேடுகளுக்குள் ஒரு சிறிய தொகையை விட்டுச் செல்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதனை அடுத்து, விசாரணைகள் மற்றும் கேமரா உதவியுடன், இந்த வழக்கு தொடர்பாக 55 வயதுடைய ஆடவர் ஒருவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

திருடுவதற்காக கதவை உடைத்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் ஓய்வெடுக்கும் இடத்தில் பல மாதங்களாக வேவு பார்க்கும் ஆடவர்!