டிப்பர் லாரி, சிற்றுந்து, கார் மோதி விபத்து: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

tipper truck minibus accident SLE
Stomp

டிப்பர் லாரி மற்றும் சிற்றுந்துடன் கார் மோதி விபத்து ஏற்பட்டது, இதில் சிக்கிய 40 வயதுடைய நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் சனிக்கிழமை மதியம் (செப். 30) சிலேத்தர் விரைவுச்சாலையில் நடந்தது.

சிங்கப்பூர் டோட்டோ: பிரம்மாண்ட முதல் பரிசு S$13 மில்லியனை தட்டிதூக்கிய ஒரே ஒரு டிக்கெட்!

விபத்து நடந்த இடத்தைக் கடந்து செல்லும் போது ஸ்டாம்ப் வாசகர் எடுத்த வீடியோவை அந்த தளத்துடன் பகிர்ந்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் கார், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) ஆம்புலன்ஸ் மற்றும் EMAS கண்காணிப்பு ஆலோசனை அமைப்பு வாகனம் ஆகியவை இருந்தன.

மதியம் 12.40 மணியளவில் மத்திய விரைவுச் சாலையை (CTE) நோக்கி செல்லும் SLE இல் நடந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய 40 வயதான கார் ஓட்டுனர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் தங்கம் விலை 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவு