முதலமைச்சர் முன்னிலையில் தமிழக அரசு- சிங்கப்பூர் நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

முதலமைச்சர் முன்னிலையில் தமிழக அரசு- சிங்கப்பூர் நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
Photo: TN Govt

 

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சிங்கப்பூர் வந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (மே 24) மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். சுமார் 350- க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

‘அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுடன் தமிழக முதலமைச்சர் சந்திப்பு’- இருவரும் ஆலோசித்தது என்ன?

இந்த மாநாட்டில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ‘ITE Education Services’ நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ‘Singapore University Of Technology & Design’ நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Hi-P International Pvt. Ltd, Singapore Indian Chamber of Commerce and Industries நிறுவனங்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… வேலையிடங்களில் புதிய நடவடிக்கைகள்

இந்த நிகழ்வின் போது, தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, சிங்கப்பூரின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப., உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன் இ.ஆ.ப., திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.