லாரி, வேன் விபத்து – இருக்கையில் சிக்கிய ஓட்டுநர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

(photo: today)

ஜுராங் ஈஸ்ட்டில் வெள்ளிக்கிழமை (மே 21) லாரி மற்றும் வேன் விபத்துக்குள்ளான நிலையில் லாரி ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் சிக்குண்டு மீட்கப்பட்டார்.

சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) வெளியிட்ட முகநூல் பதிவில் தோ குவான் சாலை மற்றும் தோ குவான் ஈஸ்ட் சந்திப்பில் லாரி மற்றும் வேன் விபத்துக்குள்ளானதான பதிவிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சமூக அளவில் 30 பேருக்கு தொற்று – 22 பேருக்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு

காவல்துறையினர் விசாரித்ததில், விபத்தில் சிக்கிய இருவரும் 25 மற்றும் 26 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவித்துள்ளனர்.

SCDF தகவலின்படி, விபத்தில் லாரி உள்நோக்கி நசுக்கப்பட்டு ஓட்டுனரின் கால்கள் இருக்கையின் கீழ் கடுமையாக மாட்டிக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது.

இந்த விபத்து குறித்த தகவல் காலை 10.15 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டது. ஜுராங் மற்றும் கிளெமென்டி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் முதலில் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

பின்னர், சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து உயரடுக்கு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவும் (Dart) விரைந்து வரவழைக்கப்பட்டனர்.

அதன் பின்னர், லாரியின் நசுக்கப்பட்ட பகுதி வாயிலாக ஹைட்ராலிக் உபகரணங்களை செலுத்தி சிக்கிக்கொண்டுள்ள ஓட்டுனரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதே வேளையில் துணை மருத்துவ குழுவை சார்ந்தவர்களும் ஓட்டுனரின் நிலை குறித்து கண்காணித்து வந்தனர்.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஓட்டுநர் சுயநினைவோடு மீட்க்கப்பட்டு, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (National University Hospital ) கொண்டுசெல்லப்பட்டார்.

வேன் ஓட்டுநர் வேனில் இருந்து சுயமாக வெளியேறி, துணை மருத்துவக்குழுவின் பரிசோதனைக்கு பிறகு, இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹவ்காங் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் கட்டாய COVID-19 சோதனை