டோட்டோ லாட்டரியில் பிரம்மாண்ட முதல் பரிசு S$12,979,820 – தட்டி சென்ற 4 பேர்.. அதில் ஒருவர் S$1 டிக்கெட் வாங்கியவர்

Toto jackpot split 4 ways on Sep. 18, each winner gets S$3,244,955
Singapore Pools website and Steve Teo/Google Maps

Toto jackpot: டோட்டோ லாட்டரியில் தொடந்து 3 குலுக்கல் யாரும் வெற்றிபெறாத காரணத்தால் பிரம்மாண்ட முதல் பரிசை நான்கு அதிர்ஷ்ட நபர்கள் தட்டி சென்றுள்ளனர்.

அதாவது நேற்று செப். 18 அன்று வெளியான முடிவின் முதல் ஜாக்பாட் பரிசான S$12,979,820 வெள்ளியை அவர்கள் நால்வரும் பிரித்து கொள்கின்றனர்.

கோவிலில் பெண்ணை அறைந்து, இழிவாக பேசி.. ஆடவர் ஒருவரை தமிழில் மோசமாக திட்டிய இந்தியர்

டோட்டோ முடிவுகள் வெளியான இணையதளத்தின்படி, அந்த ஒவ்வொரு வெற்றியாளரும் சுமார் S$3,244,955 தொகையை அள்ளிச்செல்வர்.

வென்ற டிக்கெட்டுகளில் ஒன்று, வெறும் S$1 வெள்ளிக்கு QuickPick Ordinary Entry முறையில் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை பிளாக் 88 Whampoa Drive #01-857 இல் அமைந்துள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கிளையில் அவர் வாங்கியுள்ளார்.

சாங்கி விமான நிலையத்தில் இனி பாஸ்போர்ட் கிடையாது.. 2024 முதல் “டோக்கன்” தான்