“மக்கள் ஏன் இவ்வளவு ரூடாக இருக்கிறார்கள்” – சிங்கப்பூர் வந்த சுற்றுலா பயணி கவலை

People are so rude Tourist Grab driver forced
PHOTO: Screengrab/TikTok/Nicolecrewe

நாம் எங்கு சென்றாலும் அங்கு இறங்கியவுடன் நாம் சந்திக்கும் முதல் அனுபவம் நம் மனதில் நீங்காமல் நிலைத்திருக்கும்.

அதுபோல, சிங்கப்பூர் வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தாம் சந்தித்த முதல் அனுபவத்தை டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார்.

சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாட்டவர்களே, பொதுமக்களே இத ஒருபோதும் செய்யாதீங்க – உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

நிக்கோல் (Nicole) என்ற அவர், சிங்கப்பூர் வந்தவுடன் ஹோட்டலுக்கு கிராப் எடுத்துச் சென்றுள்ளார்.

ஆனால் ஓட்டுநர் குறிப்பிடப்பட்ட பயண இலக்கில் இறக்கி விட மறுத்ததாகவும், அதனால் இறங்கி நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கடந்த நவ.1 ஆம் தேதி பதிவேற்றிய டிக்டோக் வீடியோவில் அவர் கூறினார்.

தன்னுடைய முதல் அனுபவம் மிக மிக மோசமாக இருந்ததாக கூறிய அவர், மக்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக கூறினார்.

அதாவது கிராப் ஓட்டுநர் பெண் சொன்ன இலக்கை மீறி பயணித்து சென்றது மட்டுமல்லாமல், அங்கேயே இறக்கி விட்டு சென்றதாகப் பகிர்ந்து கொண்டார்.

ஐந்து நிமிடம் நடந்து சென்றதாகவும், மேலும் அவரிடம் கனமான பை ஒன்று இருந்ததாகவும் குறிப்பிட்டார் அவர், நீங்கள் கனமான பையுடன் இவ்வாறு நடந்தால் ஏற்றுக்கொவீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அந்த பை 17 கிலோவுக்கு மேல் இருந்தது என்றும், அதை முதுகில் வைத்துக்கொண்டு பயணம் செய்ததாகவும் அவர் சொன்னார்.

பயணம் செய்து சோர்வடைந்த நிலையில் இருந்த அவருக்கு, அந்த அனுபவம் மோசமாக இருந்ததாக அவர் AsiaOne-இடம் கவலையுடன் கூறினார்.

கடும் நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் – காலை இழக்கும் நிலையில் இருந்த ஊழியருக்கு உதவிக்கரம் நீட்டிய சிங்கப்பூரர்கள்!