சுற்றுலா விசாவில் வேலைத் தேடி சென்றவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

Singapore passengers-trichy-airport

திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் ஏஜெண்டுகள் மூலம் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு வேலைத் தேடி சென்றுள்ளனர். அந்நாட்டு தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவர்களைக் கண்டறிந்த காவல்துறையினர், அவர்களைப் பிடித்து தனியாக அடைத்து வைத்தனர்.

30 ஆண்டுகளாக இருக்கும் வழிபாட்டு தலத்தை அகற்ற இறுதி எச்சரிக்கை – கூடுதல் அவகாசம் கோரிக்கை

பின்னர், அங்குள்ள இந்திய தூதரகம் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, அவர்கள் அனைவரையும் விடுவித்தது மலேசிய அரசு. இதையடுத்து, அவர்கள் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த இரண்டு நாட்களில் 385 பேர் விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த நிலையில், மேலும் 150 பேர் சிக்கியுள்ள கூறுகின்றனர்.

சுற்றுலா விசாவில் வேலைத் தேடி சென்றவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

ஏஜெண்டுகள் பணம் பெற்றுக் கொண்டு, ஏமாற்றுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சுற்றுலா விசாவில், சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு செல்லும் போது சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று காணலாமே தவிர, சுற்றுலா விசாவில் வேலையைத் தேடுவது சட்டப்படி குற்றம் ஆகும்.