சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் வந்து S$29,000 திருடிய வெளிநாட்டவர் – சிறையில் அடைத்த போலீஸ்

6-bangladeshi-nationals-arrested-for-gang-robbery-
(Photo: TODAY)

சிங்கப்பூரில் விடுமுறைக்கு டூரிஸ்ட் விசாவில் வந்த பெண் ஒருவர் S$29,000 தொகையை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தன்னுடன் வந்த பயண நண்பரிடம் இருந்து அந்த தொகையை திருடி சூதாட்ட விடுதியில் அதை வைத்து சூதாடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயதான சாங் ஹயானுக்கு நேற்று (மே 24) ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வேலையிடத்தில் புதிய நடைமுறை.. மீறினால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடை – அக். முதல் அமல்

கடந்த ஏப்ரல் 17 அன்று சாங் தனது தோழியான 30 வயது தென் கொரிய பெண்ணுடன் சிங்கப்பூர் வந்துள்ளார்.

முதலில் வேறு ஹோட்டலில் தங்கினர். பின்னர் ஏப்., 20 ஆம் தேதி மெரினா பே சாண்ட்ஸில் உள்ள அறைக்கு மாறியுள்ளனர்.

அதன் பின்னர் ஏப். 21 அன்று மதியம் 1 மணியளவில், அந்த பெண் தனியாக ஷாப்பிங் சென்றுள்ளார், அப்போது ஹோட்டல் அறையில் சாங் தூங்கிக் கொண்டிருந்தார்.

மாலை 3 மணியளவில் திரும்பி வந்தபோது பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, ​​​​அறையில் தூங்கி கொண்டிருந்த சாங்கை காணவில்லை.

அதன் பின்னர் தேடியதில், பெண் தனது பேக்கில் வைத்திருந்த S$29,000 பணத்தையும் காணவில்லை.

பின்னர் சாங்குக்கு போன் செய்தார், ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை.

அதன் பின்னர் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். அதே நாளில் சாங் கைதும் செய்யப்பட்டார்.

வீட்டுல யாருப்பா இருக்கீங்க.. அழையா விருந்தாளியாக வந்த “ராட்சத உடும்பு” – சிதறி ஓடிய மக்கள்