40 மீட்டர் உயர டவர் கிரேனில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியருக்கு திடீர் உடல்நலக்குறைவு..

40 மீட்டர் உயர டவர் கிரேனில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. worker crane rescue

சுமார் 40 மீட்டர் உயரத்தில் டவர் கிரேன் ஒன்றின் மேல் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.

அவர் சுயமாக கீழே இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தபோது, ​​சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உதவி செய்து அவரை பத்திரமாக மீட்டது.

இலவசம்.. இலவசம்.. திரு தர்மனின் வெற்றியை கொண்டாடும் கடை!

இந்தச் சம்பவம் 71A Tuas Nexus Drive இல் உள்ள Tuas Water Reclamation Plant இல் நேற்று (செப். 3) பிற்பகல் 2:25 மணியளவில் நடந்தது.

SCDF தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவின் (DART) நிபுணர்கள் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

47 வயதான அந்த ஊழியர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஃபேஸ்புக் பதிவில் PUB தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட அவர், SCDF மருத்துவரால் சோதனை செய்யப்பட்டு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த 7040, 1388 ஆகிய 4D டிரா எண்கள்