விடாமல் அழுதுகொண்டே இருந்த குழந்தை: கனிவுடன் நடந்து கொண்ட பேருந்து ஓட்டுநர் – குவியும் பாராட்டு

Aleesa Saaib's Facebook page

சிங்கப்பூரில் உள்ள அலீசா சாயிப் என்பவருக்கு கடந்த ஜனவரி 27 அன்று பேருந்தில் ஏற்பட்ட மனதைக் கவரும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இரண்டு இளம் குழந்தைகளின் தாயான அவர், பள்ளியிலிருந்து அவர்களை அழைத்து கொண்டு, மாலை 5:15 மணியளவில் டவர் டிரான்சிட்டின் பேருந்து சேவை 98ல் ஏறியதாகக் ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் கடும் நடவடிக்கை: 27 வணிக நிறுவனங்கள் மூட உத்தரவு – 341 பேருக்கு அபராதம்

அப்போது, ஹைதர் என்ற குழந்தை வெறுப்புடன் இருப்பது போன்றும், சிறிது பசியுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், குழந்தை பயணம் முழுவதும் அழுததாகவும் மற்றும் பல முறை தாயின் கைகளிலிருந்து விடுபட்டு வெளியே வந்ததாகவும் கூறியுள்ளார் அலீசா.

சாலையில் செல்லும் சில கனரக வாகனங்களை பார்க்கும் போதெல்லாம் சிறிது நேரம் அமைதியாக இருந்த ஹைதர், தொடர்ந்து பேருந்து சென்றவுடன் மீண்டும் அழுது கொண்டே இருந்தார்.

அவரை அமைதிப்படுத்த வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று திகைத்து நின்ற தாயிக்கு, இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

ஒரு சந்திப்பில் பேருந்து நின்றதும், பேருந்து ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கி அந்த குடும்பத்தை அணுகினார்.

பிள்ளையை ஏன் அழ வைக்குறிங்க என்று அவர் திட்டுவார் என்று நினைத்தாக அலீசா பகிர்ந்து கொண்டார்.

மாறாக, அவர்களை நோக்கி வந்த பேருந்து ஓட்டுநர், அவரின் இரு குழந்தைகளுக்கும் இரண்டு சாக்லேட் கொடுத்து அமைதிப்படுத்தினார்.

இந்த எளிமையான அவரின் செயல் அலீசாவுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சாக்லேட்டைப் பெற்ற ஹைதர் அழுகையை நிறுத்தினார், பேருந்து அமைதியானது. அலீசா ஓட்டுனருக்கு நன்றி தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ஒரே இரவில் 3 இடங்களில் தீ விபத்து – 515 பேர் வெளியேற்றம்