Tracetogether செயலியை நீக்கிவிட வேண்டாம் – திடீரென சிங்கப்பூர் அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்! வெளியான காரணம்!

Singapore TraceTogether tokens
(Photo: Smart Nation Singapore/Facebook)

Tracetogether செயலியை நீக்கிவிட வேண்டாம் என சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் அளித்துள்ள பேட்டியில் Tracetogether கருவியை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, Tracetogether கருவி மற்றும் செயலியின் பயன்பாடு தேவைப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய இந்த செயலி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும், கட்டுப்பாடுகள் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை.

ஒரு சில தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் இன்னும் தொடர்கின்றது. தொற்று பரவலின் தீவிரத்தை பொறுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வாய்ப்பு உள்ளது.

அப்போது மீண்டும் Tracetogether கருவியை தேட வேண்டி இருக்கும் என்பதால், இப்போதே பத்திரமாக வைத்துக்கொள்ளும் படி அமைச்சர் கூறியுள்ளார்.