போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றவருக்கு சிறை!

indian-origin-singapore-jailed

சிங்கப்பூரில் வசித்து வருபவர் சீன நாட்டைச் சேர்ந்த 38 வயதான ஹான் ஷாவ்லு. இவர் கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் 3- ஆம் தேதி அன்று இரவு 11.30 PM மணிக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியுள்ளார். அப்போது சாலையில், நின்றுக் கொண்டிருந்த சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஹான் ஷாவ்லு (Han Shaolu) வாகனத்தை நிறுத்தினர். அதைத் தொடர்ந்து, அவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது தெரிய வந்தது.

NE நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்த P5 மாணவர்களுக்கு இலவச ரயில் பயணம் !

இதையடுத்து, அவர் மீது போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ஹான் ஷாவ்லு மாண்டரின் மொழியில் அதிகாரிகளிடம் பேசியுள்ளார். இந்த மொழி அதிகாரிகளுக்கு புரியாத நிலையில், சக அதிகாரிகளின் உதவியை நாடினர். அதன் தொடர்ச்சியாக, 50 மதிப்புள்ள இரண்டு சிங்கப்பூர் டாலர்கள் தருவதாகவும், இது போதாவிட்டால் மேலும் தருவதாகவும், தன்னை விட்டுவிடும்படியும் பணத்தைக் காட்டி பேசியுள்ளதை அதிகாரிகளுக்கு தெரிவிக்க, அதிகாரிகள் ஹான் ஷாவ்லு மீது லஞ்சம் தர முற்பட்டது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.

ஹான் ஷாவ்லு மீது மூன்று குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தில் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் முன் வைத்தனர். விசாரணையின் போது ஹான் ஷாவ்லு, தான் லஞ்சம் தரவில்லை; அபராதத் தொகையை மட்டுமே அதிகாரிகளிடம் செலுத்த முற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

“சம்பளம் சரியாக கொடுப்பதில்லை.. வேலைல இருந்து தூக்கிட்டாங்க..” சிங்கப்பூரில் ஊழியர்கள் வைக்கும் புகார்கள் – MOM ரிப்போர்ட்

எனினும், அவரிடம் ஐந்து நாள் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், ஹான் ஷாவ்லுவுக்கு எட்டு வாரக் கால சிறைத்தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.