சிங்கப்பூரில் வேலை தேடுபவர்களுக்கு உதவ மேலும் 8 வேலை நிலையங்கள் திறப்பு..!

(Photo: TODAY)

கடந்த ஜூலை 1 முதல், சிங்கப்பூர் முழுவதும் 8 வேலை நிலையங்கள் (Satellite career centres) ஏற்கனவே 1,300 வேலை தேடுபவர்களுக்கு உதவி வழங்கியுள்ளன.

அதாவது அவர்களின் வேலை தேடலில் அடிப்படை மற்றும் அதற்கான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவியுள்ளன என்று போக்குவரத்து ஆகிய துறைகளுக்கான மூத்த துணையமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

இது போன்ற எட்டு நிலையங்கள் மற்ற முக்கிய பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன. மேலும் திட்டத்தின் மூன்றாம் கட்டம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்குகிறது, அதில் மேலும் எட்டு நிலையங்கள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார சீர்கேட்டைத் தொடர்ந்து, சில நிறுவனங்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. மேலும் அவற்றின் ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவதும் தவிர்க்க முடியாதது தான், அதே நேரத்தில் மற்ற துறைகள் வளர்ச்சியைக் காணும்போது ஊழியர்களை அவைகள் பணியமர்த்தும் என்று திரு சீ கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் புதிய துறைகளுக்கு செல்ல உதவ வேண்டும் என்றும், ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு பணிக்கு செல்ல இடைப்பட்ட பாலமாக இருந்து உதவ, பயிற்சி மற்றும் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதில் வேலைவாய்ப்பு மற்றும் வேலைத்திறன் கழகம், அதனுடன் SkillsFuture சிங்கப்பூர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்ச்சியில் 400க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் இடம்பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 80 சதவீதம் கீழ்நிலை ஊழியர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஆகும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கான தீர்வையில் கூடுதல் சலுகை – MOM..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg