லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் ஊழியர்கள் விபத்தில் சிக்கும் அவலம் – வலுக்கும் எதிர்ப்பு

(Photo from ItsRainingRaincoats video)

சிங்கப்பூரில் கடந்த வாரம் நடந்த இரண்டு தனித்தனி விபத்துக்களில் பல ஊழியர்கள் காயமடைந்தனர்.

இதனை அடுத்து லாரி மூலம் ஊழியர்களை ஏற்றிச்செல்லும் நடைமுறை மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தங்கும் விடுதி ஒன்றில் 24 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டிருக்கலாம்

கடந்த ஏப்ரல் 20 அன்று பான் தீவு அதிவேக நெடுஞ்சாலையில் லாரி மற்றும் ஊழியர்களை ஏற்றிச்சென்ற லாரி இடையே விபத்து ஏற்பட்டது.

இதில் இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர், மேலும் 15 பேர் காயமடைந்தனர். அதே போல கடந்த சனிக்கிழமை நடந்த மற்றொரு விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்துகளைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பல அமைப்புகளும் லாரி மூலம் ஊழியர்களை ஏற்றிச்செல்லும் நடைமுறைக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இது ஒரு நீண்டகால பிரச்சினையாகும், கடந்த 2010ஆம் ஆண்டு இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதை அடுத்து, லாரிகளுக்கு உயர் பக்கவாட்டு கம்பிகள் மற்றும் மேற்கட்டும் நிறுவ வேண்டிய விதிமுறைகள் மறுஆய்வுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்டன.

தற்போதைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, ஓட்டுநர்கள் 60 கி.மீ வேகத்தில் அல்லது மெதுவாக லாரியை இயக்க வேண்டும், ஒவ்வொரு ஊழியருக்கும் குறைந்தபட்ச இடைவெளி மற்றும் முறையான பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

இந்நிலையில், ஊழியர்களைப் பேருந்து அல்லது வேன்களில் கொண்டு செல்லும் முறையை கட்டாயமாக்கும்படி மனு ஒன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அதிகமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தடுப்பூசிக்கும், பின்னர் ஆடவருக்கு ஏற்பட்ட பக்கவாதத்திற்கும் தொடர்பும் இல்லை…