ரஷ்யாவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதை ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தல்!

Photo: Changi Airport

 

 

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ரஷ்ய நாட்டின் தெற்கு பகுதியில் நிலவும் நிலையற்ற பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்பதால், சிங்கப்பூரர்கள் ரஷ்யாவிற்கு அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் ஒத்திவைக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்துகிறது. ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் மோதலைக் கருத்தில் கொண்டு, உக்ரைனுக்கான அனைத்து பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷப் பூஜை!

கடந்த மாதங்களில், பெல்கோரோடில் (Belgorod) ஷெல் தாக்குதல்கள், மாஸ்கோவில் (Moscow) ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் (St Petersburg) குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே, தற்போது ரஷ்யாவில் உள்ள சிங்கப்பூரர்கள் அனைவரும் மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பதிவுச் செய்யாத சிங்கப்பூரர்கள், உடனடியாக https://eregister.mfa.gov.sg என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று இ- பதிவு செய்ய வேண்டும். தூதரக உதவி தேவைப்படும் ரஷ்யாவில் உள்ள சிங்கப்பூரர்கள், மாஸ்கோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் +7 499 241 37 02 என்ற தொலைபேசி எண்ணையும், 24 மணி நேரமும் செயல்படும் அவசரக் கட்டுப்பாட்டு அறையின் என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்புக் கொள்ளலாம்.

பெண்களிடம் பாலியல் அத்துமீறல்…. இந்திய சமையல்காரருக்கு சிறை!

அதேபோல், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு +65 6379 8800/6379 8855 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புக் கொள்ளலாம்.” இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.