நைஜீரியாவில் உள்ள சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்குமாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

Singapore travel advisory condemns attacks Gaza Israel
Photo: Ministry of Foreign Affairs Singapore

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) நேற்று (27/10/2022) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் நைஜீரியாவில் பயங்கரவாத தாக்குதல்களின் அபாயங்கள் அதிகரித்துள்ள நிலையில், சிங்கப்பூரர்கள் நைஜீரியாவிற்கு அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மனைவியை கொடுமை செய்து தாக்கிய ஆடவர்… அலேக்கா தூக்கிய போலீஸ்

தற்போது நைஜீரியாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கவனிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் அதிக கூட்டம் இருக்கும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் மற்றும் விரிவான பயணம் மற்றும் மருத்துவக் காப்பீடு வாங்குவது உட்பட, அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். சிங்கப்பூரர்கள் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பதிவு செய்யவில்லையென்றால், உடனடியாக https://eregister.mfa.gov.sg என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று இ-பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிங்கப்பூரிலிருந்து பார்த்தால் சீனக் கடல் தெரியுமாம்! – அவ்ளோ உச்சியில் கட்டப்படும் வீடு!

தூதரக உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் பின்வரும் முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்.

லாகோஸில் உள்ள சிங்கப்பூரின் துணை தூதரகம் (Honorary Consulate-General of the Republic of Singapore in Lagos):

நிபோஸ்ட் ட்வர்ஸ், பிளாக் A (6வது தளம்) Nipost Towers, Block A (6th Floor),
1/3 ஓலோகன் அக்பாஜே தெரு (1/3 Ologun Agbaje Street),
விக்டோரியா தீவு (Victoria Island),
லாகோஸ் (Lagos), நைஜீரியா (Nigeria),
தொலைபேசி எண்கள்: +234-1-4610818, 4619088, 80996, 78888,
மின்னஞ்சல் முகவரி: singapore.consulate@tolaram.com.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக அளவில் வேலை: கட்டுமானம், உற்பத்தியில் வேலைவாய்ப்பு அமோகம்

24 மணி நேரமும் செயல்படும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகம்,
டாங்லின், சிங்கப்பூர்- 248163,
தொலைபேசி எண்: +65 6379 8800/8855,
ஃபேக்ஸ் எண்: +65 6476 7302,
மின்னஞ்சல் முகவரி: mfa_duty_office@mfa.gov.sg.

இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.