சிங்கப்பூரில் விமான டிக்கெட் பதிவு செய்யும் போது நடக்கும் மோசடி – வெளிநாட்டு பணியாளர்களுக்கு விடுக்கப்படும் முக்கிய எச்சரிக்கை!

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை
Pic: Unsplash

சமீபத்தில் சிங்கப்பூரில் பயணம் தொடர்பான மோசடியில், $34,000 மதிப்பிலான பணத்தை வெளிநாட்டு பணியாளர்கள் இழந்துள்ளனர்.

இத்தகைய மோசடிகள் தொடர்ச்சியாக அதிகரித்துவருவதாக  காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில் போலியான டிராவல் ஏஜெண்டுகள் இணயைத்தளங்களை உருவாக்கி வருகின்றனர். அவற்றின் வழியாக விசா விண்ணப்பம், நுழைவு விண்ணப்பம், விமான டிக்கெட்டுகள் போன்ற சேவைகளை வழங்குவதாக கூறுகின்றனர்.

அதற்கு அதிகபட்ச சலுகைகளையும் மோசடிக்காரர்கள் வழங்குகின்றனர். இவை உண்மை என்று நம்பி பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தனிநபர் மற்றும் வங்கி தகவல்களை பதிவு செய்கின்றனர்.

பணத்தையும் கட்டி விடுகின்றனர். மேற்கொண்டு டிராவல் ஏஜெண்டுகளிடம் இருந்து தகவல்கள் கிடைக்காத சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் அதிகாரிகளுடனும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொண்ட பிறகே ஏமாற்றப்பட்டது தெரிய வருகிறது.

நம்பகமான டிராவல் ஏஜெண்டுகள் மூலமாக மட்டுமே விமான டிக்கெட்டுகளை வாங்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

அது மட்டுமல்லது ஏஜெண்டுகள் முறையான அங்கீகாரம் பெற்றவரா என்பதையும் பொதுமக்கள் சோதனை செய்யவேண்டும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.