சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எளிமை!! – பிப்ரவரி 21 முதல் நடைமுறை!

VisitSingapore.com

சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிமையாக்கியுள்ளது சிங்கப்பூர். இதனை அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு (MTF) இன்று (பிப். 16) அறிவித்தது.

அதில், வரும் காலத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் SHN தனிமை இல்லாத பயணத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் மேற்கோள்காட்டப்பட்டது.

50 ஆண்டுகள் சிறப்பான உறவை கொண்டாடும் சிங்கப்பூர் – பங்களாதேஷ்: வெளிநாட்டு ஊழியர்களுக்கும் வாழ்த்து!

தற்போதுள்ள வகை 2, 3 மற்றும் 4 ஆகியவை General Travel என்னும் ஒரே பொது பயண வகையாக இணைக்கப்படும்.

கோவிட்-19 பாதிப்பு அதிகரிக்கும் நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்காக Restricted category என்னும் புதிய கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட வகை உருவாக்கப்படும். இந்த வகையை சேர்ந்த பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு கடுமையான எல்லை நடவடிக்கைகள் விதிக்கப்படும்.

தடுப்பூசி போடாத மற்றும் தடுப்பூசி போடப்பட்ட “வகை 1” பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் மற்றும் VTL ஏற்பாடுகள் வழியாக வரும் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கும் தனிமை இருக்காது.

இந்த புதிய நடைமுறைகள் வரும் பிப்ரவரி 21, 2022, 11:59pm முதல் சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு பொருந்தும்.

Travel history என்னும் பயண விவரம் 14லிருந்து ஏழு நாட்களாக குறைக்கப்படும்.

அதே போல, SHN கால அளவு அனைத்து நாடு அல்லது பிராந்திய வகைகளுக்கும் ஒரே அளவாக ஏழு நாட்களுக்குத் தரப்படுத்தப்படும்.

VTL மூலம் வரும் பயணிகளுக்கான கூடுதல் மேம்படுத்தப்பட்ட சோதனை முறை நிறுத்தப்படும்.

சிங்கப்பூரில் மூடப்பட்ட 2,200 கட்டுமான நிறுவனங்கள் – வெளிநாட்டு கட்டுமான ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?