விழா கொண்டாட்டத்தின்போது விழுந்த மரம்.. அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்பாளர்கள்

Shin Min Daily News

அட்மிரால்டியில் விழாவைக் கொண்டாடிக்கொண்டிருந்த குடியிருப்பாளர்கள் அருகிலேயே மரம் விழுந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் அவர்கள் நடு-இலையுதிர்கால விழாவை கொண்டாடும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

“சிங்கப்பூரில் ஒன்றும் இல்லை.. அங்கு வாழ்க்கை நடத்த முடியாது..” என்று கூறிய சிங்கப்பூர் பெண் – கொதிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பலர்

நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்த வித காயங்களும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணிக்குப் பிறகு செம்பவாங் டவுன் கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விழுந்த அந்த மரம் 10 மீட்டர் உயரம் கொண்டது என்றும், அது வெற்றிகரமாக அகற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த பணியில் கிரேன் மற்றும் ஐந்து ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர், பின்னர் இரவு 10.45 மணியளவில் மரம் அகற்றப்பட்டது.

மரம் விழுந்தபோது பலத்த காற்றோ பலத்த மழையோ இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அக். முதல் வரும் மாற்றங்கள்: வெளிநாட்டு ஊழியர்கள், வேலை, குற்றப்புள்ளிகள் – முழு தொகுப்பு