சிங்கப்பூரில் திடீரென வெளுத்து வாங்கிய கனமழை… முறிந்து விழுந்த மரம்: சிதைந்து போன கார்

punggol-tree-fall-on-car-cover
Mothership reader

சிங்கப்பூரில் நேற்று பிப். 20 மத்திய வேளையில் சில பகுதிகளில் திடீரென பலத்த மழை வெளுத்து வாங்கியது.

இந்த திடீர் கனமழை காரணமாக, பிளாக் 289C பொங்கோல் பிளேஸ் (Block 289C Punggol Place) அருகே கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

தேடப்பட்டு வந்த ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தபோது தூக்கிய போலீஸ்!

மரம் முறிந்து விழுந்து கிடப்பதையும், அதனை SCDF வீரர்கள் அப்புறப்படுத்துவதையும் காணொளிகள் மூலம் காண முடிகிறது.

மதர்ஷிப்ப பகிந்துள்ள ஒரு புகைப்படத்தில், மரக்கிளை ஒன்று காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதை காண முடிகிறது.

நேற்று பிப். 20 பிற்பகல் 3:15 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக SCDF உறுதிப்படுத்தியது.

அந்த சம்பவத்தில், கார் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கிக் கொண்டதாகவும் SCDF கூறியது.

பின்னர், அந்த நபர் SCDF வீரர்களால் காப்பாற்றப்பட்டார், அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

“சிங்கப்பூர் டாலர்” உள்ளிட்ட ரூ.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!