ஏர் ஏசியா விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு!

Photo: TIRUCHIRAPPALLI INTERNATIONAL AIRPORT Official Twitter Page

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, பஹ்ரைன், ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களுக்கும் விமான சேவையை விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.

சிங்கப்பூரில் இருந்து சீனா செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில், மார்ச் 1- ஆம் தேதி அன்று நள்ளிரவு 12.00 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது ஏர் ஏசியா விமானம். இந்த விமானம் மீண்டும் நள்ளிரவு 01.10 மணிக்கு மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட வேண்டியிருந்தது. ஆனால், ஏர் ஏசியா விமானம் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக, விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டதால், 100- க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனெனில், கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வர வானில் பறந்துக் கொண்டிருக்கும் போது, பறவை ஒன்று மோதியதால். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏர் ஏசியா விமானம், திருச்சி விமான நிலையத்திலேயே 10 மணி நேரத்திற்கும் மேலாக, கோலாலம்பூர் செல்லவிருந்த 178 பயணிகளும் விமான நிலையத்திலேயே இருந்தனர்.

சிங்கப்பூரில் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி!

வழக்கமாக, இந்த வழித்தடத்தில் நள்ளிரவு 11.40 PM மணிக்கு வந்திறங்கி, மீண்டும் 12.10 PM மணிக்கு புறப்படும். ஆனால், திடீர் கோளாறால் இந்த தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் விமானத்தில் உள்ள கோளாறு சீர் செய்யப்பட்டு, புறப்பட தயாராகும் என திருச்சி விமான நிலையத்தின் இயக்குநர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விமான நிலையத்தில் காத்திருந்தப் பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்டவைகளை ஏர் ஏசியா விமான நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன், அவரசமாக கோலாலம்பூர் செல்லவிருக்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என்றும், விமான டிக்கெட் கட்டணம் முழுவதும் திருப்பி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஏர் ஏசியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, இன்று (மார்ச் 2) நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.