கைப்பையில் மறைத்துக் கடத்தி வரப்பட்ட தங்கம்…. திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய பயணி!

கைப்பையில் மறைத்துக் கடத்தி வரப்பட்ட தங்கம்.... திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய பயணி!
Photo: AIU- TRICHY

 

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், ஷார்ஜா, குவைத், சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்கூட், ஏர் ஏசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உலகின் சிறந்த விமான நிறுவனமாக தேர்வு – கத்தார் ஏர்வேஸ் விமானத்தை பின்னுக்கு தள்ளி சாதனை

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 20) துபாயில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் (SriLankan Airlines), இலங்கையின் கொழும்பு வழியாக திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த விமானத்தில், பயணம் செய்த பயணிகள் மற்றும் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர்.

இதில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆண் பயணியைப் சோதனை செய்த அதிகாரிகள், அவர் வைத்திருந்த பெண் பயன்படுத்தும் கைப்பையைச் சோதனை நடத்தினர். அதில், உருளை வடிவிலான 5 தங்கக்கட்டிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து, தங்கத்தைக் கடத்தி வந்த நபரையும் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் “buck moon” என்னும் சூப்பர் மூனை காண அரிய வாய்ப்பு – எங்கே, எப்போது காணலாம்?

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 19 லட்சத்து 12 ஆயிரத்து 274 என்றும், அவற்றின் எடை 318 கிராம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.