பாம்புகள், பல்லிகளை கடத்தி வந்த பயணி…. விமான நிலையத்தில் பரபரப்பு!

பாம்புகள், பல்லிகளை கடத்தி வந்த பயணி.... விமான நிலையத்தில் பரபரப்பு!
Photo: Trichy Customs

 

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 47 பாம்புகள் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலை தேடும்போதும், வேலையிடத்திலும் காட்டப்படும் பாகுபாடு – சிங்கப்பூரில் குறைவாக பதிவு

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து இரு மார்க்கத்திலும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம், பல அரிய வகை உயிரினங்களைக் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

இதனால் திருச்சி மண்டல சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை அவ்வப்போது, பரிசோதித்தும், தீவிர கண்காணிப்பிலும் உள்ளனர்.

இந்த நிலையில், மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவுச் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில், சென்னையைச் சேர்ந்த முகமது முகைதீன் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது, அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 47 பாம்புகள் மற்றும் 2 பெரிய பல்லிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இஸ்ரோ விண்ணில் செலுத்திய 3 செயற்கைக்கோள்களை வடிவமைத்த தமிழர்!

பறிமுதல் செய்தை மலேசியாவுக்கு மீண்டும் அனுப்பும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், முகமது முகைதீனை காவல்துறையினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்த நிலையில், காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்தி வரப்பட்ட பாம்புகள், பல்லிகளால் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சக பயணிகளிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.