விமான நிலையத்தின் கழிவறையில் கிடந்த தங்க பேஸ்ட்…..சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் கிடந்த தங்க பேஸ்ட்.....சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!
Photo: Trichy Customs

 

திருச்சி விமான நிலையத்தில் (Trichy International Airport) பயணியிடம் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.56 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளில் 0.8%-ஐ விற்றது சிங்டெல்!

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் (Customs Officers) சோதனை நடத்தினர். அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதை அறிந்து இலங்கையில் இருந்து வந்த பயணி ஒருவர் ஒரு கவரை ஆண் கழிவறைக்கு அருகே போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தால் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு அதிக சம்பளம்.. ஜூலை முதல்

இதைக் கண்ட அதிகாரிகள், அதை எடுத்து பிரித்து பார்த்த போது, அதில் தங்க பேஸ்ட்டுகள் (Gold Paste)இருந்தது தெரிய வந்தது. கவரில் 1.56 கிலோ எடைக்கொண்ட தங்க பேஸ்ட் இருந்ததாகத் தெரிவித்த சுங்கத்துறை அதிகாரிகள், இதன் மதிப்பு சுமார் ரூபாய் 1.03 கோடி என்று தெரிவித்தனர். மேலும், விமான நிலையத்தின் கழிவறை அருகே கவரைப் போட்டுவிட்டு சென்ற பயணி யார்? என அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.