திருச்சி, கொழும்பு இடையே விமான சேவையைத் தொடங்கும் ‘FitsAir’!

Photo: FitsAir Official Twitter Page

இலங்கை நாட்டின் கொழும்புவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘FitsAir’ என்ற புதிய தனியார் விமான நிறுவனம், கொழும்பு, துபாய், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தென்னிந்தியாவின் திருச்சியில் இருந்து கொழும்புவுக்கு வரும் அக்டோபர் 29- ஆம் தேதி முதல் இரு மார்க்கத்திலும் விமான சேவையை வழங்க உள்ளதாக ‘FitsAir’ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மதிய உணவு விருந்தளித்த அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

இந்த விமானம், கொழும்புவில் இருந்து காலை 07.30 மணிக்கு புறப்பட்டு காலை 08.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். அதேபோல், திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 09.25 மணிக்கு புறப்படும் விமானம், கொழும்பு விமான நிலையத்தை காலை 10.00மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், மதுரையில் இருந்து கொழும்பு நகருக்கு விமான சேவை வழங்கவும் ‘FitsAir’ நிறுவனம் உத்தேசித்துள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://fitsair.com/ என்ற ‘FitsAir’ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்புகள், உடும்புகள்… அதிர்ந்த அதிகாரிகள்… சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பு!

ஏற்கனவே, திருச்சி மற்றும் கொழும்பு இடையே ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.