‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை’- விறுவிறுப்பாக நடைபெறும் டிக்கெட் முன்பதிவு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தொடர்ந்து இரு மார்க்கத்திலும் தினசரி நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு IX 682 என்ற விமானத்தையும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு IX 681 என்ற விமானத்தையும் விமான நிறுவனம் இயக்கி வருகிறது.

வீடுகளில் வளர்க்கும் விலையுயர்ந்த மீன்கள்தான் ருசியா இருக்கு! – சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதிகளில் தென்படும் நீர்நாய்கள்

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல குறைந்தபட்ச விமான பயண கட்டணமாக ரூபாய் 8,162 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இரு மார்க்கத்திலும் விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழக முதலமைச்சருடன் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான இந்திய தூதர்கள் சந்திப்பு!

இந்த வழித்தட விமான சேவைக்கான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.