‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!  

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), தமிழகத்தின் திருச்சி மற்றும் கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது. இதில், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் நிறுவனத்தின் விமான சேவைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணியாளர்கள் எதிர்கொள்ளப்போகும் சிக்கல்? திடீரென நடந்த மாற்றம்!

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே நேரடி மற்றும் தினசரி விமான சேவையை ஸ்கூட் நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் A321neo என்ற விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைகளுக்கான ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதங்கள் வரையிலான விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வரும் செப்டம்பர் 5- ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு செல்வதற்கான பயணக் கட்டணம் ரூபாய் 7,178 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதேபோல், இந்த விமான சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை குறித்த விரிவான தகவல்!

விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான சேவை தொடர்பான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .