திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவை- ஏப்ரல் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

tamilnadu worker death from singapore scoot
Photo: Flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ‘ஸ்கூட்’ விமான நிறுவனம் (Flyscoot), இந்தியாவின் திருச்சி, கோவை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.

இந்திய குடியரசுத் தினம்- சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அழைப்பு!

குறிப்பாக, திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வரும் ஸ்கூட் நிறுவனம், நாள்தோறும் இரண்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு ஸ்கூட் நிறுவனத்தின் https://www.flyscoot.com/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஷ்டஈடாக S$20,000 தொகையை பெற்ற நபர் – நீதிமன்றம் அதிரடி

ஸ்கூட் விமான நிறுவனம், குறைந்தக் கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.