சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் விமான நிறுவனம் (Flyscoot), “திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி மற்றும் தினசரி விமான சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்த வழித்தடத்தில் தினசரி இரண்டு விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது.
தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரானிய அணி! – என்ன நடந்தது?
திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு ஆரம்பக் கட்டணமாக 8,519 ரூபாயும், சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்வதற்கு ஆரம்பக் கட்டணமாக 11,742 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான கட்டணங்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தினாலும், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதாலும், இந்த வழித்தட ஸ்கூட் விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.