‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- மே முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

tamilnadu worker death from singapore scoot
Photo: Flyscoot

திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி இரண்டு நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot). குறைந்த கட்டணத்தில் விமான சேவை, பயணிகளுக்கு உகந்த நேரத்தில் விமான சேவை உள்ளிட்ட காரணங்களால், இந்த விமானத்தைப் பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

போலி இ-விசா இணையதளங்கள்…. இந்திய தூதரகம் எச்சரிக்கை!

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வருபவர்களும், திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்பவர்களும் ஸ்கூட் விமான சேவையை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கோடைக்கால விடுமுறை தொடங்கியுள்ளதை அடுத்து, இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் பிரம்மோத்சவம் பூஜை!

குறிப்பாக, மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களுக்கு விமான பயண டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://beta.makeabooking.flyscoot.com/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.