‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

tamilnadu worker death from singapore scoot
Photo: Flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ‘ஸ்கூட்’ நிறுவனம் (Flyscoot), இந்தியாவின் திருச்சி, கோவை, திருவனந்தபுரம், அமிர்தசரஸ், விசாகப்பட்டினம், ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு குறைந்தக் கட்டணத்தில் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

மறைந்த முன்னாள் சிங்கப்பூர் நடிகர் – ஆழ்ந்த இரங்கல்கள்.

குறிப்பாக, திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது ஸ்கூட் நிறுவனம். இந்த வழித்தட விமான சேவைக்கு ‘A321neo’ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு குறைந்தபட்ச விமானப் பயணக் கட்டணமாக ரூபாய் 6,998.97 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு!

விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.