திருச்சி, சிங்கப்பூர் இடையே ‘ஸ்கூட் ஏர்லைன்ஸ்’ விமான சேவை- மே மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கியது - கடும் வெப்பம் தான் காரணம்
Photo: FlyScoot

இந்தியாவில் திருச்சி. கோவை, அமிர்தசரஸ், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது. இது Non- VTL விமான சேவை ஆகும். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் ஏர்லைன்ஸ் (FlyScoot Airlines) குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருவதால் பயணிகள் மத்தியில் அந்நிறுவனம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக 15,283 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – 4 பேர் பலி

குறிப்பாக, திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான சேவையை வழங்கி வருகிறது. அந்த வகையில், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையேயான மே மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவைத் தொடங்கியுள்ளது ஸ்கூட் ஏர்லைன்ஸ். முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் https://www.flyscoot.com/en என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாட்டுக்கு செல்ல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு 2 வாரங்களுக்கு தடை – காரணம் என்ன?

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் கட்டாயம் சிங்கப்பூர் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பயணிகளை ஸ்கூட் ஏர்லைன்ஸ் அறிவுறுத்தியுள்ளது.