‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

scoot-flight-diverted
Photo:Facebook/flyscoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் தினசரி இரண்டு விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

சிங்கப்பூருக்குத் தேவையான உணவு மொத்தமும் இங்கிருந்துதான் இறக்குமதியாம்! – மீன்களின் விலையேற்றத்திற்கு நாடாளுமன்றத்தில் கேள்வி!

திருச்சி, சிங்கப்பூர் இடையே குறைந்த கட்டணத்தில் ஸ்கூட் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த விமான சேவையை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த விமான நிறுவன சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாடியிலிருந்து சிகரெட் துண்டுகளை வீசுவது யார்? – சிங்கப்பூரில் அடிக்கடி அரங்கேறும் சம்பவம்!

குறிப்பாக, இந்த வழித்தட விமான சேவைக்கான நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற ஸ்கூட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.