திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

Photo: IndiGO Official Twitter Page

திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம். இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சென்னை, சிங்கப்பூர் இடையேயான விமான சேவையை அதிகரித்தது ஏர் இந்தியா நிறுவனம்!

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி ஒரு நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines) வழங்கி வருகின்றது. அதேபோல், திருச்சியில் இருந்து சென்னை வழியாக சிங்கப்பூருக்கு தினசரி ஏழு விமான சேவைகளையும், திருச்சியில் இருந்து பெங்களூரு வழியாக சிங்கப்பூருக்கு தினசரி இரண்டு விமான சேவைகளையும் அந்நிறுவனம் வழங்கி வருகிறது.

பாலஸ்டியர் சாலையில் உள்ள கடையில் திடீர் தீ விபத்து!

இந்த அனைத்து வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.