திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களின் பட்டியல்!

Photo: Air India Express Official Twitter Page

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தொடர்ந்து விமான சேவையை வழங்கி வரும் நிறுவனங்களின் பட்டியல் குறித்து விரிவாகப் பார்ப்போம். அதன்படி, இந்த வழித்தடத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express), ஸ்கூட் (Flyscoot), ஏர் ஏசியா (AirAsia), இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines), ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines), மலிண்டோ ஏர் (Malindo Air) உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

சிங்கப்பூரில் 15 வயது சிறுமியை 12 நாட்களாக காணவில்லை; உதவுங்கள் வாசகர்களே!

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட் விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

அதேபோல், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே கோலாலம்பூர் வழியாக நாள்தோறும் இரண்டுக்கும் மேற்பட்ட விமான சேவைகளை வழங்கி வருகிறது ஏர் ஏசியா நிறுவனம். இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், திருச்சியில் இருந்து கொழும்பு வழியாக சிங்கப்பூருக்கு விமான சேவையை வழங்கி வருகிறது.

4 லட்சம் சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் – 100க்கும் மேற்பட்ட போதை ஆசாமிகள் கைது !

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட நகரங்கள் வழியாக திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே தொடர்ந்து தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது. இதுமட்டுமல்லாமல், இந்த வழித்தடத்தில் நேரடி விமான சேவையையும் விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மலிண்டோ ஏர் நிறுவனம், திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே கோலாலம்பூர் வழியாக தினசரி விமான சேவையை வழங்கி வருகிறது.

இந்த வழித்தட விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் விமான பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.