திருவனந்தபுரம், சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவை- ஜூன், ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கியது - கடும் வெப்பம் தான் காரணம்
Photo: FlyScoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ‘ஸ்கூட்’ நிறுவனம் (Flyscoot), இந்தியாவின் திருச்சி, கோவை, ஹைதராபாத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு இரு மார்க்கத்திலும் குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது.

கட்டாய விடுப்பு, 24 மணிநேர உதவி தொலைபேசிச் சேவை… சிங்கப்பூர் பணியாளர்களின் நலக்காக வெளியாகப்போகும் அசத்தல் அறிவிப்பு!

குறிப்பாக, திருவனந்தபுரம் மற்றும் சிங்கப்பூர் இடையே தொடர்ந்து இரு மார்க்கத்திலும் ஸ்கூட் நிறுவனம், விமான சேவையை வழங்கி வருகிறது. வாரத்தில் அனைத்து நாட்களிலும் இரு மார்க்கத்திலும் விமான சேவையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. எனினும், மே மாதத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு சில ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவையை இந்நிறுவனம் வழங்குவதில்லை.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ஸ்ரீ அங்காளம்மன் திருவிழா!

இந்த வழித்தடத்தில் A321neo என்ற விமானத்தை விமான நிறுவனம் இயக்கி வருகிறது. இதற்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு https://www.flyscoot.com/en/ என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.