வெடித்து தீப்பற்றி எரிந்த லாரி – விரைந்து வந்த SCDF… என்னதான் நடந்தது?

வெடித்து தீப்பற்றி எரிந்த லாரி - விரைந்து வந்த SCDF... என்னதான் நடந்தது?
Mothership

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே சாலையில் நேற்று முன்தினம் (பிப். 13) டிப்பர் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

தீப்பற்றி எரியும் முன் வெடிப்பு சத்தம் கேட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

காதலர் தினம்: “மனைவியுடன் வாங்க 50% சலுகையை தட்டிட்டு போங்க” – சிங்கப்பூர் கிளப் அதிரடி

ஸ்டில் ரோடு சவுத் வெளியேறும் முன், சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

அதாவது அன்று இரவு சரியாக 7:15 மணியளவில் தகவல் கிடைத்ததாக SCDF கூறியுள்ளது. டிப்பர் லாரியின் என்ஜின் பெட்டி மற்றும் கேபினில் தீ பற்றியதாக சொல்லப்பட்டுள்ளது.

தண்ணீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவியை பயன்படுத்தி SCDF வீரர்கள் தீயை அணைத்தனர்.

நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் நீக்கம்: முகக்கவசம் எங்கு அணிய வேண்டும்? எந்த ஊழியர்களுக்கு கட்டாயம்