கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட Singapore PR – வீடியோக்களை வைத்து வளைத்துப்பிடித்த போலீஸ்

minimart robbery spore PR charged
Singapore Police Force

லோரோங் 1 தோ பாயோவில் அமைந்துள்ள நைஸ் மினிமார்ட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக 38 வயதான சிங்கப்பூர் நிரந்தரவாசி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கடந்த சனிக்கிழமை காலை 8:10 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் போலீஸ் படை உறுதிப்படுத்தியது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் எகிறும் வாடகை… “இனி முதலாளிகள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” – MOM

அவர் மீது இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மஹ்மூத் அப்தெல்தவ்வாப் ரியாட் அப்தெல்ஹாக் என்ற அந்த நபர், கத்தியுடன் ஆயுதம் ஏந்தி கொள்ளையில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இருப்பினும், உதவி வேண்டி ஊழியர் சத்தம் போட்டதை அடுத்து அவர் மினிமார்ட்டில் இருந்து வெறுங்கையுடன் ஓடிவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

விசாரணைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், டாங்லின் போலீஸ் பிரிவின் அதிகாரிகள் அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்து, புகாரளித்த ஐந்து மணி நேரத்திற்குள் அவரை கைது செய்தனர்.

பின்னர், கருப்பு நிற ஆடை, தலையில் முக்காடு மற்றும் கை ஸ்லீவ் ஆகியவை சாட்சிப் பொருட்களாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு 6000 இலவச புடவைகள்.. “சொந்த ஊருக்கு அனுப்பி மகிழ்வோம்” – தமிழ்நாட்டு பணிப்பெண்கள்