சிங்கப்பூர் துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த மற்ற இரு ஊழியர்களின் அடையாளம்..

Tuas explosion 3 workers dead
(Photo: SCDF/ Facebook)

துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த 3 பேரில் ஒருவர் இந்திய நாட்டை சேர்ந்த ஊழியர் என்பது அடையாளம் காணப்பட்டது.

தற்போது மற்ற 2 பேரின் அடையாளமும் காணப்பட்டுள்ளதாக ItsRainingRaincoats அமைப்பு தெரிவித்துள்ளது.

சிலேத்தர் அதிவேக நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்து விபத்து

உயிரிழந்த மற்ற இருவரின் விவரம்

அதில் ஒருவர் சொஹைல் (Shohel), இவர் ஐந்து உடன்பிறப்புகளில் இரண்டாவதாக பிறந்த அன்பான மகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரியுடன் அவருக்கு 23 வயது பூர்த்தியானது.

சிங்கப்பூருக்குச் செல்வதற்கு முன்பு, குடும்பத்தை இனி தாம் கவனித்துக்கொள்வதாக அவர் தனது தந்தையிடம் கூறிவிட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

Tuas explosion workers identified
(Photo via itsrainingraincoats)

இன்னொரு ஊழியர் அனிசுஸ்சமான் (Anisuzzaman), சுமார் 17 மாதங்கள் அவர் சிங்கப்பூரில் பணிபுரிந்துள்ளார்.

அவரது பெற்றோர் இருவர் மூலம் வரும் வருமானம் போதுமானதாக இல்லாத நிலையில், அனிசுஸ்மான் கடன் வாங்கி சிங்கப்பூருக்கு வேலைக்கு வவந்துள்ளார்.

ItsRainingRaincoats பதிவில், அவர் இன்னும் செலுத்த வேண்டிய கடன் தொகை பாக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ICUவில் சிகிச்சை

வெடிப்பில் சிக்கிய மேலும் 5 பேர் ICUவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய நிலவரப்படி, 8 ஊழியர்களையும் அடையாளம் கண்டுள்ளதாக அமைப்பு புதுப்பித்துள்ளது.

புக்கிட் பஞ்சாங் பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரையில் உலாத்திய ஆடவர் கைது