துவாஸ் தொழில்துறை கட்டடத்தில் தீ: உதவிக்கு விரைந்து சென்ற வெளிநாட்டு ஊழியர்கள்

Tuas fire Foreign workers
(Photo: SCDF/ Facebook)

சிங்கப்பூரில், No.32E துவாஸ் அவென்யூ 11இல் நேற்று (பிப். 24) காலை 11.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

அங்கு தீயில் சிக்கிக்கொண்டவர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் உதவி செய்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

PIE நெடுஞ்சாலையில் லாரி, பேருந்து மோதி விபத்து – 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

தொழில்துறை கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவி அணிந்து, எச்சரிக்கையுடன் குடியிருப்பு உள்ளே நுழைந்து தீயை அணைத்தனர்.

அந்த கட்டடத்தின் மற்றொரு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் பக்கத்தில் இருந்த ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ ஏற்பட்ட அறையில் சிக்கியவர்களை காப்பாற்றினர்.

அந்த அறையில் சிலருக்கு ஏற்பட்ட கடுமையான தீக்காயங்கள் காரணமாக அவர்கள் தப்பிக்கமுடியாத சூழல் உருவானதால், ஆடைகளை வெட்டி எடுத்து ஊழியர்கள் அங்கு இருந்த சிலரை காப்பாற்றினர்.

மேலும், அறையில் தண்ணீர் பாய்ச்சி, 2 பேர் தப்பிக்க சில ஊழியர்கள் உதவி செய்ததாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிங்கப்பூரிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி செல்ல.. மார்ச் வரை!