துவாஸ் சவுத் பகுதியில் திடீர் தீ விபத்து!

Photo: SCDF Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள 9 துவாஸ் சவுத் அவெனியூ 10-ல் ( 9 Tuas South Avenue 10) உள்ள வளாகத்தில் நேற்று (27/12/2021) மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து நேற்று (27/12/2021) மாலை 05.30 PM மணிக்கு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

“74e, 151e பேருந்து சேவைகள் ஜன.17 முதல் நிறுத்தப்படும்”- எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனம் அறிவிப்பு!

பின்னர், வளாகத்தில் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டறிந்த தீயணைப்பு வீரர்கள், அங்கு நுழைந்தனர். அப்போது, மாடியின் வளைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னரின் (Container) உட்புறத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. அழுத்தப்பட்ட காற்று நுரை ஜெட் (Compressed Air Foam Jet) மற்றும் ஆளில்லா தீயணைப்பு இயந்திரத்தைப் (Unmanned Firefighting Machine) பயன்படுத்தித் தீயை அணைத்தனர். எனினும், கண்டெய்னரில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளாகத்தில் இருந்த 25 குடியிருப்பாளர்கள் தாங்களாவே சுயமாக வெளியேறினர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் பிரிவு தளபதி ஒருவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவரின் பரிந்துரையின் பேரில், ‘Ng Teng Fong’ பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஆடவருக்கு சிறை

தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.