துவாஸில் உள்ள தொழில்துறைக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து!

Photo: SCDF Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள முக்கியமான பகுதிகளில் ஒன்று துவாஸ். இங்கு பல்வேறு நிறுவனங்களுக்கு தொழிற்சாலைகளும் சொந்தமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்க்கு தொற்று உறுதி

இந்த நிலையில், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (Singapore Civil Defence Force- ‘SCDF’) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “10 துவாஸ் வியூ சதுக்கத்தில் (No 10 Tuas View Square) உள்ள தொழில்துறை ஐந்து அடுக்குமாடி கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக, நேற்று (04/07/2022) மதியம் 12.25 PM மணியளவில், மேற்கூறிய இடத்தில் விபத்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினருக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, 17 அவசர ஊர்திகளுடன் (Emergency vehicles) சம்பவ இடத்திற்கு விரைந்த சுமார் 80 தீயணைப்பு வீரர்கள் (Fire Fighters) தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பழைய காகிதங்கள் மற்றும் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இந்த நிறுவனத்தின் மூன்றாவது மாடியில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீயை அணைக்கும் பணியின் உச்சக்கட்டத்தில், தீயைக் கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் மொத்தம் நான்கு நீர் ஜெட் வாகனங்கள் (Water Jets) பயன்படுத்தப்பட்டன. பின்னர் தீயணைப்பு வீரர்கள் கவனமாக கட்டடத்திற்குள் சென்று பாதிக்கப்பட்ட தளத்தில் தீயை அணைத்தனர். ஒன்றரை மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சிங்கப்பூரில் மேலும் ஒரு ஊழியர் மரணம்; கடலில் தவறி விழுந்து பலி – 4 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சடலம்

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் வருவதற்கு முன்னதாக, சுமார் ஒன்பது பேர் பாதுகாப்பாக சுயமாக வெளியேறினர். அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.