நடுவானில் மதுபோதையில் ரகளை செய்த சிங்கப்பூர் பயணி… சென்னையில் தரையிறங்கிய விமானம்!

File Photo

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் விமானத்தில் இருந்து சிங்கப்பூருக்கு 318 பயணிகளுடன் விமானம் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மெல்னிக் யூரி (வயது 30) என்பவர் பயணம் செய்தார். அவர் மதுபோதையில் இருந்த நிலையில், விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது, சக பயணிகளிடம் ரகளை செய்துள்ளார்.

டாக்ஸி, பேருந்து, தனியார் வாடகை ஓட்டுநர்களுக்கு டிஜிட்டல் உரிமங்கள் – இன்று முதல்…

அவரை இருக்கையில் அமருமாறு விமான பணிப்பெண்கள் கூறியும், அவர் விமான பணிப்பெண்களையும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதையடுத்து, விமானப் பணிப்பெண்கள் உடனடியாக, விமானத்தில் இருந்த தலைமை விமானிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த பயணியிடம், ரகளை செய்தால் விமானத்தில் இருந்து இறக்கி விடப்படுவீர்கள் என்று தலைமை விமானி எச்சரிக்கை செய்தார். எனினும், அந்த சிங்கப்பூர் பயணி தொடர்ந்து ரகளை செய்ய, சென்னை வான்வெளியில் விமானம் பறந்துக் கொண்டிருந்தது. இதையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரிகளைத் தொடர்புக் கொண்டு, விமான அவசரமாகத் தரையிறங்க அனுமதி கோரினார்.

இதையடுத்து, அதிகாரிகள் டெல்லியில் உள்ள தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, விமானத்தைத் தரையிறக்க அனுமதி அளித்தனர். அதைத் தொடர்ந்து, துருக்கி விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்ட சிசு… யார் செய்தது? – போலீஸ் தேடல்

மதுபோதையில் இருந்த சிங்கப்பூர் பயணியை, விமானத்தில் இருந்து இறக்கிய தலைமை விமானி, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அவர் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அலுவலகத்தில் தங்க வைத்தனர். இதைத் தொடர்ந்து, துருக்கி விமானம் 317 பயணிகளுடன் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

இந்திய விசா இல்லாத காரணத்தால், விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார். பின்னர், அவருக்கு மதுபோதைத் தெளிந்த பிறகு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிகள் விமானம் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.