பதில் தவறாக சொன்னதற்காக 8 வயது மாணவியை அடித்து தாக்கிய ஆசிரியர் – 4 நாள் சிறை

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

சிங்கப்பூர்: தவறாக பதில் கூறியதற்காக எட்டு வயது மாணவியைத் தாக்கிய பகுதி நேர ஆசிரியருக்கு இன்று நான்கு நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

57 வயதான தியோ தியன் ஹூ என்ற அவர் தாக்குதல் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதேபோன்ற இரண்டாவது குற்றச்சாட்டு பரிசீலிக்கப்பட்டுள்ளது.

யுஷுனில் 3 வாகன விபத்து: சிறுமி உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதி

கடந்த மார்ச் 18 அன்று மாணவி வீட்டில் பயிற்றுவிக்கும்போது, ​​தனது கேள்விகளுக்கு மாணவி தவறான பதில்களை அளித்ததால் தியோ கோபமடைந்தார்.

இதனை அடுத்து மாணவியை திட்டிக்கொண்டே, இரண்டு முறை கையில் குத்தினார் தியோ. இதனால் வலி பொறுக்க முடியாத சிறுமி அழுதார் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், சிறுமியின் தலையைப் பிடித்து கீழே தள்ளி அட்டகாசம் செய்துள்ளார் அந்த ஆசிரியர்.

DBS வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி – சேமிப்பு கணக்கின் வட்டி விகிதம் அதிகரிப்பு